தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதிய விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி ஜீவா தம்பதியினர் இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர் மூத்த மகன் ரமேஷ் (27) இன்னும் திருமணம் ஆகவில்லை இவர் திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணியாற்றி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலக் கோளாறு காரணமாக பணியிலிருந்து விலகி வீட்டில் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் ரமேஷின் தாயார் ஜீவா இன்று காலை திருமங்கலம் செல்வதாகவும் சிறிது நேரம் கழித்து நீயும் திருமங்கலத்திற்கு வா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு திருமங்கலம் சென்றுவிட்டார் இதனையடுத்து 8: 45 மணிக்கு ரமேஷ் கப்பலூரிலிருந்து திருமங்கலம் செல்ல சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்திற்கு வரும் போது அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் அப்போது மதுரையிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற பயணிகள் ரயில் வந்தது இதனை கவனிக்காத ரமேஷ் ரயில் மோதிய விபத்தில் உடல் இரண்டு துண்டாக சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவத்தை கண்ட பகுதி மக்கள் உடனடியாக மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவலறிந்து வந்த மதுரை ரயில்வே போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் ரமேஷ் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது உயிரிழந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் மதுரை ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!