எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் பிப்ரவரி 25 முதல் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் பிரச்சார இயக்கம்.

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் 2,000க்கும் மேற்பட்ட கடிதங்களை தமிழக முதல்வருக்கு அனுப்பும் நிகழ்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தபால் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சிக்கந்தர், தொண்டர் அணி தலைவர் ஒலியுல்லா, வடக்கு தொகுதி செயலாளர் சையது பாஷா,பொருளாளர் புரோஸ் கான்,மேலும் தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்..நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சட்டப்பிரிவு 161ன் படியும் உடனடியாக 10 ஆண்டுகள் கழித்த அனைத்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் கருணையோடு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சிசார்பாக, கடந்த 25ம் தேதி முதல் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதும் பிரச்சாரம் இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் இந்த கோரிக்கையின் நியாயங்களை உணர்ந்து பாரபட்சமின்றி அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லாத சூழலில், முழுக்க முழுக்க அது தமிழக அரசின் கைகளின் மட்டுமே உள்ள விஷயமாகும் என்பதால், கடந்த காலங்களைப் போலல்லாமல், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும். மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும், 7 தமிழர்களுக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!