டூவீலர்மீது அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன்பலி.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்பராஜ் இவரது தனது நண்பர் பரத் என்பவருடன் சோழவந்தான் அடுத்த விக்கிரமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் நாராயணபுரம் ஊத்து அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இன்பராஜ் பலியானார் அவரது நண்பர் பரத்ரிசி காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் பிணத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகிறார். விபத்திற்கு காரணமானஅரசு பேருந்து குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் கல்லூரி மாணவன் குடும்பத்தார்கள் மிகுந்தசோகத்தில் இருந்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!