தோப்பூர் அரசு நெல் கொள்முதல் கிட்டங்கியில் திறந்தவெளியில் தேக்கிவைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் கடுமையாக சுட்டெரித்து வந்தது. 100 டிகிரிக்கும் மேலாக வெயில் சுட்டெரித்ததால் இரண்டு நாட்களாக வெப்பசலனம் காரணமாக நேற்றும், அதற்க்கு முன்தினம் மாலை மழை பெய்யத் தொடங்கி திடீரென பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்புக் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் அரசு நியாயவிலை கடைகளுக்கு அரிசியாக மாற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகிறது.இந்நிலையில் கிடங்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூடைகள் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி இருப்பத்தோடு நேற்று பெய்த கோடை மழையில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் நெல்மூட்டைகள் பூஞ்சைகள் உருவாகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இதற்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணம் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையால் வீணாவதை தடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!