கொரானா வைரஸ்பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசிசெலுத்தி பயன்படும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், மதுரை பைபாஸ் சாலையில் உள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து
அலுவலர் சிங்காரவேலன் தலைமையில் சுமார் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் , 45 வயதிற்கு உட்பட்ட 500 பேரும் 45 வயதுக்கு மேற்பட்ட 500 பேரும் சுமார் ஆயிரத்து கோவிட் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.இதில், போக்குவரத்து வாகன ஆய்வாளர் சி. செந்தில்குமார், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அன்பு நிதிமற்றும் போக்குவரத்து துறை அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில், போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று , தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.