டி.கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கல்:

மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனையொட்டிடி.கல்லுப்பட்டி ‘ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த மாதம் 5-ந் தேதி முதல் தொடர்ந்து வீடு வீடாக சென்று மூன்று வேளைக்கும் உணவு மற்றும் பழங்கள் வழங்கி வருகின்றனர்.மதுரையில் கொரானோஇரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது .இந்த வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவால் , விவசாயத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் ,ஜவுளிக் கடைகள் , மளிகை கடைகள்டீ மற்றும் பேக்கரி கடைகள் , சாலையோர வியாபாரிகள் , ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான ஏழை , எளிய குடும்பங்களை சார்ந்ததொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இந் நிலையில் , மதுரை மாவட்டம்டி.கல்லுபட்டி ‘ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு ‘ சார்பில் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம் , ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விஜய பார்த்திபன் , பாஸ்கரன் , மாற்று திறனாளி முத்துச்சாமி ஆகியோரது உறுதுணையாலும் , பங்காளிப்பாலும்’ நண்பர்கள் வட்டாரம் அமைப்பு’ அனைத்து நிர்வாகிகள் மற்றும்உறுப்பினர்கள் , நண்பர்களின்கூட்டு முயற்சியின் மூலம்இணைந்து தங்களால் இயன்றநன்கொடை அளித்தும் , சக நண்பர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகள் மூலமாககடந்த மே மாதம் 9-ந்தேதி முதல் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு மற்றும் ஆதரவற்றோருக்கு வீடு வீடாக சென்று மூன்றுவேளைக்கும் உணவு மற்றும் பழங்கள் வழங்கி வருகின்றனர்.மதுரை மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும்சூழலில் ‘ நண்பர் வட்டாரம் அமைப்பு ‘ இது போன்ற மனித நேய பணி அனைத்து தரப்பு மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும் , நம்பிக்கை ஊட்டுவதாகவும் இதே போன்றுநம்மால் இயன்ற உதவியை மற்றவருக்கு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!