சாலையோரம் ஆதரவற்று இருக்கும் உறவுகளுக்கு உணவளித்துவரும் செந்தளிர் மனிதவள மேம்பாட்டுஅமைப்பு

கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுலா தளங்கள் கோவில்கள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஏராளமானோர் வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் சாலைகளில்சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள் ஒரு வேளை உணவு கிடைக்காமல் மிகவும் பரிதவித்து வருகின்றனர்.அவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளும் தன்னார்வலர்களும் சேவையாற்றி வருகின்றனர்.அந்த வகையில் செந்தளிர் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சாலையோரம் ஆதரவற்ற இருக்கும் உறவுகளுக்கு உணவளித்து அவர்களின் பசியை தீர்த்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக சென்னையில் தொடர்ந்து மதுரையில் தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோவில் கீழவாசல் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினந்தோறும் உணவளித்து பசியாற்றி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!