மதுரையில் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி : தமிழக வனிகவரித்துறை அமைச்சர் பேட்டி..!!!

மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கும் திட்டத்தை மதுரை அருகே கருப்பாயூரணியில் வைத்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்மொத்தம் 3894 பயனாளிகளுக்கு 2.31 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியும்,நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து பெட்டகம் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டது,பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி…

..முன் களப்பணியாளர்கள் பல்வேறு திட்டங்கள் திமுக காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது,கொரோனாவை ஒழிக்க மேற்கொண்ட தீவிர முயற்சியால் மதுரை மாவட்டத்தில் 1500 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 500 ஆக குறைந்துள்ளது,கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பை கண்காணிக்க பெண்களைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது,கொரோனோ முதல் அலையின் போது ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்கள் ஓராண்டு ஒப்பந்த காலம் நிறைவு பெறும் முன்பே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பணி வழங்க கோரி ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து நிலையில் தற்போது 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் பணியமர்த்தப்படியுள்ளதாக தெரிவித்தார்,29 ஆயுஷ் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!