மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட
வலையங்குளம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சோதனை செய்த போலீசார் வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனன் மகன் கார்த்திக் (37) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.எனவே கார்த்திகை கைது செய்த பெருங்குடி போலீஸார் சாராயம் காய்ச்சுவதற்கான தேவையான பொருட்களை பறிமுதல் செய்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.