மதுரையில் தொற்றுபாதிக்கப்பட்டவரா போன் செய்தால் போதும் வீட்டிற்கே இலவசமாக உணவு கொடுத்து வரும் தன்னார்வலர்: குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டத்தில குரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கடந்த நான்கு தினங்களாக குறைந்து வந்தாலும் வந்தாலும் வீட்டில் 7047 பேர் தனிமைப்படுத்தி கொண்டனர். அவர்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவை என்பது உணவுதான். அதுவும் சத்தான சுகாதாரமான உணவு தேவை என்பதை கருத்தில் கொண்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் சக்கரா ரெஸ்டாரண்ட் நடத்திவரும் அறிவழகன் தொற்று பாதிக்கப்பட்ட மற்றும் உடன் இருப்பவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று இலவசமாக மூன்று வேளையும் உணவுகளை வழங்கி வருகிறார்.உணவே நோய்க்கு அருமருந்து என்பதால் அறிவழகன் – லட்சுமி தம்பதியினர் தங்களது செல்போன் நம்பரை வாட்ஸ் அப் குழுக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார்.அதன்படி மதுரை வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, கேகே நகர், விரகனூர், முனிச்சாலை, ஐயர் பங்களா பிபி குளம் என பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உடன் இருப்பவர்கள் இலவசமாக உணவுகளை பெற்று வருகின்றனர்.இதற்காக பிரத்தியோக சமையலர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார்.இதுகுறித்து அறிவழகன் கூறும்போது தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்கள் போன் செய்தாலே போதும் அடுத்த நொடியே உணவை எடுத்துக்கொண்டு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று உணவை இலவசமாக வழங்கி வருகிறோம் என்றும், மூன்று வேளையும் உணவு வழங்கி வருவதாகவும், தற்போது ஒரு நாளைக்கு 300 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 10 நாட்களாக இந்த பணியை செய்து வருவதாகவும் மதுரை மாவட்டத்தில் ஒருவரும் கூட குரோனா தொற்று இல்லை என்று சொல்லும் வரை இந்த பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.இவரது இந்த சேவையை மதுரை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டிலுள்ளவர்களும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!