தமிழகத்தில் கொரணா 2வது அலையை கட்டுபடுத்த தடுப்பூசி, சித்தா ஆயுர்வேதம உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது.தமிழகம் முழுவதும் அனைத்து பேரூராட்சிகள், ஊராட்சிகள் நகராட்சிகளில் கொரானா
கவனிப்பு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை பேரூராட்சி துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் கொரானா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாட்சியர் பழனிகுமார், வட்டார மருத்துவர் வளர்மதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, பாலசந்தர் மற்றும் அந்தந்த துறை அலுவர்கள் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.