சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய பாஜக அரசு!

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி ஜூன் 01 அன்று வீடுகள் தோறும் மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்புகளை பதிவு செய்தனர் வீடுகளில் பதாகைகள், சுவரொட்டிகளை ஏந்தி, கண்டன கோஷங்கள் முழங்க சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராககீழவெளிவீதி அண்ணாசிலை அருகில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் வீட்டின் முன் போராட்டம் நடைபெற்றது.இதில் பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி கதிஜா பீவி மாநில செயற்குழு உறுப்பினர் நசரத் பேகம், புறநகர் பொறுப்பாளர் ரியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.நாடு பெருந்துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு நடுவே, தனது மோசமான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கும் மோடி அரசு, அதனை திசைதிருப்பும் வகையில், சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தங்களின் ஆட்சி நிர்வாகத் தோல்வியை மறைக்க குடியுரிமை போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களை தூண்டும் மத்திய அரசின் இந்த அபத்தமான நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜூன் 01 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைமை அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி இன்றைய தினம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நடைபெறும் எதிர்ப்பு பிரச்சாரத்திலும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!