இராஜபாளையம் – ட்ரோன் கேமராவில் காவல்துறை கண்காணிப்பு. தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் 850 வாகனங்கள் பறிமுதல்.. 1500 வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அடுத்து ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 2 மாவட்ட எல்லைகள் பகுதியில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது இது போக 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர் இதைத் தொடர்ந்து இன்று ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் நில ஆக்கிரமிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் ஆறு ஆய்வாளர்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் போன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் தீவிரமாக செய்யப்படும் எனத் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார் தற்போதுவரை 850 வாகனங்கள் தேவை இன்றி வெளியே சுற்றிய அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் 1500 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார் பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள பல வருடங்கள் தவறாக பயன்படுத்தாமல் தங்களது வீட்டில் இருந்து நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வரும் மற்றவர்களை பாதுகாக்க வீட்டில் இருக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தி எச்சரித்து அனுப்பினார் இதுபோன்று மீறி வீதிகளில் சுற்றினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது

.செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!