திருப்பரங்குன்றம் பகுதியில் பசித்தால் உணவு எடுத்துக்கொள் என்று உணவு பொட்டலங்கல் வைத்த காங்கிரஸ் கட்சியினர் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் 5 வது பஸ் நிறுத்தம் அருகே மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு இல்லாதவர்களுக்கு உணவு வைக்கப்படுகிறது,

அதனை ஏழை, எளியோர் மற்றும் அதரவற்றோர் உணவு பார்சல் எடுத்துச் செல்கின்றனர்.காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் இளைஞர்களாக ஒன்று சேர்ந்து சாப்பாடு உணவுகளை தயார் செய்து தினமும் தக்காளி சாதம், புளியோதரை,பிரியாணி போன்ற உணவுகளை தயார் செய்து வைக்கின்றனர்.தற்போது கொரானா இரண்டாவது அலை காரணமாக சாலைகளில் உணவின்றி தவிக்கும் ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர் அவர்களுக்காக உணவு தயார்செய்து மதியம் மற்றும் இரவு நேரங்களில் தினமும் 400 பேருக்கு உணவு பொட்டலங்கள் வைக்கப்படுகின்றன.மேலும் இதனை தொடர்ந்து திருநகர், தனக்கன் குளம் மொட்ட மலை, திருப்பரங்குன்றம் பழங்குடி நகர் பகுதிகளில் சாப்பாடு பொட்டலங்கள் வைக்கப்படுகின்றன.அதனை கொராண காலங்களில் உணவு கிடைக்காதவர்கள் எடுத்துச் செல்லும் வகையில் சாலையோரத்தில்வைக்கப்பட்டு ஆதரவற்றோர் மற்றும் முதியோர் சாப்பாடு பார்சல் எடுத்துச் செல்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!