கொரானா இரண்டாம் அலை எதிரொலியால் திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் பெருவிழா ரத்து

ஆறுபடை வீடுகளில் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வந்த வைகாசி விசாகம் திருவிழா கொரோனா இரண்டாம் அலை எதிரொலியாக ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில்,வைகாசி வசந்த உற்சவம் விழாவானது பக்தர்கள் இன்றி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையிலும் இன்று கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்து கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர், மேலும் கோயில் கதவில் வைக்கப்பட்டுள்ள வேலில் பாலபிஷேகம் செய்ய முற்பட்ட பக்தர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என எச்சரித்து திருப்பி அனுப்பினார்.மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று காலை முதல் இரவு வரை வழக்கம்போல் ஆகமவிதிபடி எட்டு கால பூஜைகள் நடத்தப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!