மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருக்கிறது.2ம் அலையில் இதுவரை 30,521 பேருக்கு கொரோனோ பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1269 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்பொழுது 9146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனோ பரவல் சராசரியாக 13 சதவீதமாக உள்ளது..192 இடங்கள் கட்டுப்படுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனோ பாதிப்பு அதிகரிப்பால் சிகிச்சை பெருவதற்கான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பியதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மதுரையில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்துகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை தொடர்ந்து திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த சிகிச்சை மையத்தில் முதல்கட்டமாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.சிகிச்சை மையத்தை திறந்து வைக்கும் முதல்வர் மருத்துவர்கள், சுகாதார துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர்

…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!