மதுரையில் சகோதரர் அழகிரியை சந்திக்காமல் சென்றார் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின்  மதுரை சென்ற நிலையில், அவர் தனது சகோதரர் மு. க அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடக்கவில்லை.மதுரை தோப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரானா மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மதுரையில் நடந்த அரசு விழாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.இடைப்பட்ட நேரம்இதற்கு அடுத்து அவர் திருச்சி கிளம்பி செல்வதாக திட்டம் இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மு.க அழகிரியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இருவரும் இன்று சந்திப்பு நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் இன்று இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடக்கவில்லை.ஆனால் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் பணிகளை முடித்துவிட்டு திருச்சி சென்றார். திருச்சியில் திட்டப்படி இன்று கொரோனா பணிகளை பார்வையிட வேண்டும். இதனால் மு. க அழகிரியை சந்திக்காமல் ஸ்டாலின் நேரடியாக திருச்சிக்கு கிளம்பி சென்றார். 1 மணி அளவில் அவர் திருச்சிக்கு சென்றடைந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!