அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரகுடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக சுகாதார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசுடன் இனைந்து தன்னார்வ அமைப்பினரும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னிலையில் முன்னாள் வருவாய்துறை அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்களை வழங்கினார். இதில் உசிலம்பட்டி நகரசெயலாளர் பூமாராஜா, ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் துரை தனராஜ், போத்தம்பட்டி ஊராட்சி தலைவர் உக்கிரபாண்டி, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!