மதுரையில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 21பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள வின்சென்ட் நகரில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்கள், பணியாளர்கள் என மொத்தமாக சுமார் 110 பேர் தங்கியுள்ளனர்.இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனைவருக்கும் சுகாதாரத்துறையினரால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு தங்கியுள்ள 21 முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,இதுவரை முதியவர்களை முகாம்களுக்கு அழைத்து செல்லவோ தனிமைப்படுத்தவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் 60வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட தீராத நாள்பட்ட இணை நோய்கள் இருக்க கூடும் எனவே தாமதம் இன்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.தொடர்ந்து தொற்று உறுதியானதை அறியாமல் மற்றவர்களுடன் பழகிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை முதியவர்களை அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற சூழலை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!