உலக நாடுகளை அச்சுறுத்திய கொரானா வைரஸின் முதல் அலையின் தாக்கம் தற்போது இந்தியாவில் உருமாறி கொரானா 2 -வது அலையாக தமிழ்நாட்டில் ஏராளமனோர் தினசரி கொரானா தொற்று பாதிப்பால் உயிரிழந்த வருகின்றனர்.கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.கொரானா எதிரொலியாக தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 தேதி முதல் வரும் மே24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது போடப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்களின் வாழ்வாதாரம்தற்போது பாதிக்கப்பட்டுள்ளது,இதனால் நாள்தோறும் வருவாய் ஈட்டி குடும்பத்தை நடத்துபவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆதரவற்றவர்கள், முதியோர்கள் மற்றும் யாசகம் பெறுபவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கோவில் பகுதிகளில் யாசகம் பெற்று சுற்றித்திரியும் நபர்களுக்கு தற்போது ஒரு வேளை உணவு கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.அரசு உத்தரவின்படி உணவகங்களில் பார்சல் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், கோவில் பகுதிகளில் வருகை தரும் பக்தர்கள் வழங்கும் வாசகத்தை வைத்தே அப்பகுதியில் உள்ள முதியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் யாசகம் பெறுபவர்கள் பக்தர்கள் வழங்குவதை வைத்து உணவருந்தி பிழைப்பு நடத்தி வருகின்றனர்
.இவர்களின் துயரத்தைப் போக்க திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அறம் செய் நண்பர்கள் என்ற அமைப்பை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் தோட்டக்கலைத் துறையில் உதவி அதிகாரி உள்ளிட்ட நபர்களுடன் இணைந்து அவர்களால் முடிந்த அளவுக்கு, நாளொன்றுக்கு 600 பேர் வீதம் அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய நடுத்தர மற்றும் யாசகம் பெறுபவர்கள் என அனைவருக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.இளைஞர்களின் தன்னலமற்ற செயலால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது மேலும் இளைஞர்கள் தங்களுக்கு பணமாக வழங்குவதோடு பொருளாக கொடுத்தால் மேலும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.