கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முன்வந்த பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் காவல் ஆணையர் பாராட்டு

குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் மதுரை மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் CCTV கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த பண உதவி அளிக்க பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், தொண்டுநிறுவனத்தை சேர்ந்தவர்களும் முன்வந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,  கேடையம் வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மூத்த தலைவர்  ரத்தினவேல்,  செல்வம், செயலாளர்,  நீதிமோகன் மற்றும் நன்கொடை அளித்த பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!