இராஜபாளையத்தில் தமிழக அரசு உத்தரவை மீறி 10 மணிக்கு மேல் திறந்த பலசரக்கு கடைக்கு சீல் வைப்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை மீறி பல கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் பலசரக்கு மொத்த விற்பனை கடை உத்தரவை மீறி செயல்பட்டதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எச்சரித்து rs.5000 அவதார விதிக்கப்பட்டது. இன்று அதையும் மீறி 10 மணிக்கு மேலாக விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் 20க்கும் மேற்பட்ட கடை ஊழியர்களை உள்ளே வைத்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக விற்பனையில் ஈடுபட்டதை அடுத்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர் .இதேபோல் மேலும் பல கடைகளுக்கு அபராதம் விதித்து விதி மீறினால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!