கொரோனா ஊரடங்கு எதிரொலியால் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடைபெற்ற திருமணம்.

திருமண மண்டபம், கோயில் போன்ற இடங்களில் கூட்டமாக திருமணம் நடைபெற தடை விதிக்கப்பட்டதால்கோயில் வாசலில் எளிமையாக நடைபெறும் திருமணங்கள்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊரடங்கு தடை உத்தரவால் திருமணங்கள் விழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இன்று கோவில் வாசலில் மணமகன் மணமகள் மற்றும் 20 பேர் கொண்ட குழுவினர் குழுவினராக வந்து கோயில் வாசலில் மணமகளுக்குத் தாலி கட்டி அழைத்துச் சென்றனர்.கொரோன 2-வது அலை ஊரடங்கு எதிரொலியால் திருமணத்தை விமரிசையாக நடத்த முடியாமல் மிகவும் எளிமையாக நடைபெறுகிறது என, திருமண வீட்டார் கூறினர்.இதேபோல் , பாண்டிய மன்னர் காலத்திய பழமை வாய்ந்த பல மீனாம்பிகை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வாசலில் திருமணங்கள் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!