மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் அரசு மருத்துவமனையில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்படும் கொரோனா சிகிச்சை மையத்திற்கானப் பூர்வாங்க அடிப்படை பணிகள் இன்று துவங்கியது.இந்தப் பணிகளைப் பார்வையிட்ட தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, *செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:பத்து நாட்களில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தோப்பூர் காசநோய் அரசு மருத்துவமனை வளாகத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை இல்லை என்று சொல்ல முடியாத அளவிற்கு கொரோனா சிறப்பு சிகிச்சை மையப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.இன்று ஞாயிறு முழு ஊரடங்கு முழு வெற்றிப் பெற்றுள்ளது. பொதுமக்கள் சுயக்கட்டுப் பாட்டோடு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா தொற்று ஏற்பட்டால் யாரும் பயப்படத் தேவை இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள வார் ரூம்-ஐ தொடர்பு கொண்டு முழு உதவி பெறலாம்.வார் ரூம்…3ஷிப்டுகளில் 35 செவிலியர்கள் பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்து சிகிச்சைப் பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் பெறலாம்.ஆக்சிஜன் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு இரண்டு மூன்று நாட்களில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் ஆயத்தப் பணிகளை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் துரித வேகத்தில் செய்து கொண்டு இருக்கிறோம்என அமைச்சர் பி. மூர்த்தி தோப்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.