மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சியில் கல்லணை, கலைவாணர் நகரை சேர்ந்த விசாலாட்சி (60) என்பவர் முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரத்தை வனிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி யிடம் வழங்கினார்.அருகில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், டி.ஆர்.ஓ. செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ. முருகானந்தம், தாசில்தார் பழனிக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், நகர் செயலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு தலைவர்கள் பாலாஜி, முத்தையன், ஒன்றிய கவுன்சிலர் சுப்புராயலு, நிர்வாகிகள் ரகுபதி, தன்ராஜ், நடராஜன், பாண்டியமாள் உட்பட பலர் உள்ளனர்……
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.