சாலை முழுவதும் வெட்டி எறியப்பட்ட மரங்கள் தனியார் கேபிள் நிறுவன ஊழியர்களின் அட்டகாசம் விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் காவல்துறை வனத்துறை மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு ஏவிஎம் தனியார் பள்ளி அருகே நேற்று மாலை15/05/2021 தனியார் கேபிள் டிவிக்கு சொந்தமான ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள மரங்கள் முழுவதையும் வெட்டி சாலையில் வீசி உள்ளார்கள் இதனால் இரு புறங்களும் மரக்கிளைகள் கேபிள் வயர்கள் சாலையில் சிதறிக் கிடக்கிறது இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சைக்கிளில் செய்பவர்களும் மரக்கிளைகள் மீது ஏறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது இது போன்று அஜாக்கிரதையாக நடந்து கொண்ட தனியார் கேபிள் டிவி நிறுவனம் இது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளும் வனத்துறையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் அனுமதியின்றி மரங்களை வெட்டிய அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது மேலும் வெட்டிய மரங்களை சாலையில் வீசி விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.