இராஜபாளையத்தில் தந்தையை இழந்து வாடும் 12 வயது சிறுவன் தான் சேமித்த பணத்தை முதலமைச்சர் நிதிக்காக வட்டாட்சியரிடம் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரது மனைவி கனகா இவரது மகன் நிரஞ்சன் குமார் ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.இவரது மனைவி கனகா அருகில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக தமிழகத்தில் தொற்று அதிகரித்து உயிர்ப்பலிகள் அதிகமாகி வருகிறதுஇந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைக்காட்சி மூலம் கொரோனா நிதி கொடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார் .இதை அறிந்த நிரஞ்சன் குமார் தனது தகப்பனார் இறந்த நிலையில் அவரை பார்க்க வருபவர்கள் செலவுக்காக 100 . 200 . என கொடுக்கும் பணத்தை தனக்கு தேவையான தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டது போக மீதம் உள்ள பணத்தை சேர்த்து வைத்துள்ளார்.இதில் சைக்கிள் வாங்க வேண்டும் என நினைத்து வைத்து இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை இராஜபாளையம் வட்டாட்சியர் ரெங்கநாதனிடம் முதல்வர் நிதிக்காக ரூபாய் 1000 ரூபாயை வழங்கினான் வட்டாட்சியர் 1000 ரூபாய் வழங்கிய நிரஞ்சனை பாராட்டி நன்றாக படிக்க வேண்டும் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்து தருகிறேன் எனக் கூறினார்சிறுவன் கூறும்பொழுது உயிர்ப்பலி அதிகரித்து வரும் இந்த நாளில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்முதலமைச்சர் நிதி கேட்டுள்ளார் என்னால் முடிந்த ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன் இதே போல் அனைவரும் தங்களால் ஆன நிதியை தமிழக அரசுக்கு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!