தமிழகம் முழுவதும் 16 பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார் அதன்படிமதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையம் திருப்பரங்குன்றம் பழங்காநத்தம் ஜெயந்திபுரம் டிவிஎஸ் நகர் மதுரை நகர் முழுவதும் உள்ள பகுதிகளில் இன்று முதல் ஆவின் பால் விற்பனை செய்யும் நிலையங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ரூபாய் 3 ரூபாய் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதியினை தொடர்ந்து ஆட்சியில் அமைந்தும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் தற்போது ஆவின் பால் 1 லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து இன்று முதல் ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பால் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.