கொரானா விதிமுறைகளை மீறி வாரச்சந்தையில் அமைக்கப்பட்டதால் காய்கறி வியாபாரிகளை காவல்துறையினர் விரட்டியடிப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் இங்கே விற்பனைக்கு வந்த காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் இன்று தங்களது பொருட்களை சந்தைப் படுத்தியுள்ளனர்.கொரானா தொற்று அதிதீவீரமாக பரவி வரும் நிலையில் மதுரையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாள் ஒன்று 1000க் கடக்கிறது. இந்த நிலையில் தற்போது வில்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாரந்தோறும் அமைக்கப்படும் வியாழக்கிழமை அமைக்கப்படுவது வழக்கம் இந்த வாரச் சந்தை நம்பி 500-க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் இங்கு கடை போடுவது வழக்கம்இந்த நிலையில் வில்லாபுரம் பகுதியை சுற்றியுள்ள மீனாட்சி நகர், அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜெயவிலாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கக்கூடிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து பொருட்களை மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது மாநகராட்சி உத்தரவின் பேரில் மறு அறிவிப்பு வரும் வரை இங்கு நடைபெறும் வாரச்சந்தை செயல்பட அனுமதி இல்லை எனவும் மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இங்குள்ள வியாபாரிகள் தங்களுக்கு கொரானா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள மதியம் 12 மணி வரை அரசு உத்தரவின் பேரில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் எனவும், இதை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை நீட்டிக்க முடியும் என்றும் இங்குள்ள காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு தரப்பினர் கடை போடுவதற்கு அனுமதி அளித்ததால் மற்றொரு தரப்பு காய்கறி விற்பனையாளர்கள் மாநகராட்சி உதவி பொறியாளர் கருப்பையா, ஊழியர்கள் மற்றும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று ஒரு நாள் மட்டும் வார சந்தை நடத்த அனுமதியளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!