மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுபோலீசார் மாறுவேடத்தில் சென்று மதுபாட்டில் வாங்குவதுபோல் நடித்து அங்கும் இங்கும் நடந்து சென்றனர்இதனை பார்த்த பெண் போலீஸ் என்பது தெரியாமல் அவர்களிடமே மதுபாட்டில்கள் தருவதாவும் ரூ.200 ஆகும் என கூறியுள்ளார்சுதாகரித்த போலீசார் பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது மதுபாட்டில்களை கரும்பு தோட்டத்தில் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றது தெரியவந்ததுபோலீசாரின் விசாரணையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டுவந்ததுவலசை பகுதியை சேர்ந்த சின்னழகி என்ற பெண்ணை கைது செய்து தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.