மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடு நாட்டு வெடிகுண்டு வெடித்து உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது வனத்துறை காவல்துறை விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் அய்யனார் கோவில் சாலையில் ஆறாவது மயில் நீர்த்தேக்கம் அருகே கலாராணி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் தோப்பு உள்ளதுஇந்த தோப்பில் இவர்கள் இராஜபாளையம் நாட்டு இன நாய் . நாட்டுக்கோழி மற்றும் மாடு வளர்த்து வருகின்றனர் இவர்களுடைய எருமை மாடு ஒன்று வழக்கம் போல அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு அதிகாலை சென்ற பொழுது வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வேட்டையாடுவதற்காக பழங்களுக்கு இயைே வைத்திருந்ததை எருமமாடு பழம் என்று சாப்பிடும் பொழுது வெடித்து சிதறியதில் எருமை மாட்டின் வாய் தாடைகள் சிதறி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறது .இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் கலாராணி புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் காவல்துறை நேரில் விசாரணை மேற்கொண்டனர் .இதேபோல் வனத்துறை நடவும் புகார் அளிக்கப்பட்டு வனத்துறையும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மான் காட்டுப்பன்றி போன்றவர்கள் வேட்டையாடுவதற்காக இது வைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் சட்டவிரோத செயலுக்காக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்இதேபோல் கடந்த 10 தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் மற்றொரு மாடு நாட்டு வெடிகுண்டை சாப்பிட்டு உடல் சிதறி பலியானதாகவும் கூறுகின்றனர் ஆகையால் இந்தபொழுதில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது இதை கட்டுப்படுத்த காவல்துறை வனத்துறை இருவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்த நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் நீடித்தால் மனிதர்களை நாட்டு வெடிகுண்டுக்கு பலியாகும் ஆபத்தும் உள்ளது அதற்கு முன்பாக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்து நபர்களை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட கலாராணி கோரிக்கை வைத்துள்ளார்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!