சேமித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுவனுக்கு முதல்வர் புதிய சைக்கிள் வழங்கி பரிசளித்தார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன், தான் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ள தோடு, முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனை அறிந்த முதல்வர் முகஸ்டாலின் சிறுவனுக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு புதிய சைக்கிளையும் வழங்கி பரிசளித்தார் இதுகுறித்து சிறுவன் முதல்வர் ஸ்டாலின் தாத்தாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மழலை குரலில் கூறி உற்சாகத்துடன் முதல்வர் வழங்கிய சைக்கிளை ஓட்டி வருகிறான்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!