மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் கொரானா நிவாரண நிதியாக 2000 ரூபாய்க்கு டோக்கன் வழங்கும் பணியானது, ரேஷன் பொருட்கள் வழங்கும் கடை ஊழியர்கள் மூலமாக நேரடியாக பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் குடும்ப அட்டைதாரருக்கு வழங்கி வருகின்றனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருநகர், அவனியாபுரம், வில்லாபுரம், பராசக்தி நகர், பெருங்குடி, வலையங்குளம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவுப்படி கொரானா நிவாரண நிதியாக முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.இதனை த் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர் .


You must be logged in to post a comment.