கொரோனா நோயாளிகளின் மன அழுத்ததை போக்க தகுந்த ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.மதுரை , புதூரை சேர்ந்த ஆரோக்கிய மேரி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனால் அதன் அருகே உள்ள தனியார் மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த ஆரோக்கிய மேரி மன அழுத்ததின் காரணமாக குளுக்கோஸ் ஏற்றும் ஊசியால் தன்னூடைய. கழுத்தில் தனக்கு தானே குத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.மேலும் கொரோனா நோயாளிகள் பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. இது போன்ற தற்கொலை சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.கோரோனா பயத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆரோக்கிய மேரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .கொரோனா நோயாளிகளின் தற்கொலை முயற்சிகளை தடுக்கும் வகையில் கொரோனா தொற்று உள்ள நோயாளிகளின் மன அழுத்ததை போக்க தகுந்த ஆலோசனைகளை மருத்துவர்கள் உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் சம்பந்தமாக பொது மக்களுக்களிடம் கூடுதல் விழிப்புணர்வை தமிழக அரசு சார்பாக ஏற்ப்படுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள் . மேலும் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து ஆயிரகணக்கோர் வீடு திரும்பி உள்ளனர் . ஆகயினால் கொரோனா நோயாளிகள் பயத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் முயற்ச்சிகளை கை விட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!