ஸ்டாலின் யாரை கையை காட்டுகிறார் அவர் தான் அடுத்த பிரதமர் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் SP.SPL .42 சிங்கராஜா கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வளாகத்தில் . இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் விவசாயிகள் கலந்தாய்வு மன்றத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.விழாவில் பேசிய இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தனக்கு வாக்களித்த வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஸ்டாலின் எளிமையாக அனைவரிடமும் பழகக்கூடியவர் அவர் உழைப்பால் உயர்ந்தவர். ஸ்டாலின் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்து பிரதமர் என கூறினார் .தமிழகத்தை நல்வழிப்படுத்த ஒரு நல்ல தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிருக்காக இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களை மகளிருக்காக செய்து வருகிறார் விரைவில் மகளிருக்கான கடனுதவியும் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற உறுப்பினர் பேசினார் .இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் நகர பொறுப்பாளர் ராம்மூர்த்தி கூட்டுறவு சங்கத் தலைவர் ராமச்சந்திர ராஜா மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி .மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!