மற்ற மாவட்டங்களில் கட்டணமில்லா பயணம்.மதுரையில் மட்டும் இலவச பயணம்

சாதாரண மாநகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது அடுத்து தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ஐந்து முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக மாநகரங்களில் உள்ள சாதாரண பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார்.இந்நிலையில் அந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனை அடுத்து மதுரை மாநகர பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி இலவசமாக பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அனுமதி அளிக்கப்பட்ட பேருந்துகளில் மகளிர் இலவச பயண அனுமதி என்ற ஸ்டிக்கர் பேருந்தின் முன்புறம் ஒட்டப்பட்டு உள்ளது.இந்தத் திட்டத்தை வரவேற்ற பெண்கள் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்

சென்னை திருச்சி உள்பட மற்ற மாவட்டங்களிலெல்லாம் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என அரசுப் பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்தது.இதனால் இலவசம் என்ற வாா்த்தையை அரசு தவிா்த்து  கட்டணமில்லா என்ற வாா்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் இலவசப்பயணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது சா்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!