மினி பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை போக்குவரத்து காவல் துறையினர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் மினி பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினர்.

பொதுமக்களுக்கு ஆபத்து மற்றும் இடையூறு ஏற்படும்படி மினி பேருந்தை இயக்கக்கூடாது.மினி பேருந்தை சாலையின் நடுவே ஓட்டாமல் சாலையின் இடதுபுறம் மட்டுமே ஓட்டவேண்டும்.சாலையின் வலது புறமோ அல்லது இடது புறமோ மினி பேருந்தை திருப்பும்போது பக்கவாட்டு கண்ணாடியை பார்த்து பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி INDICATOR (குறியீடு) போட்டு திருப்பவேண்டும்.மது அருந்திவிட்டு வாகனத்தை ஒருபோதும் ஓட்டக்கூடாது.வாகனத்தை எடுப்பதற்கு முன்பு பிரேக், காற்று, எரிபொருள், ஓட்டுநர் உரிமம், காப்பீடு, பதிவு சான்றிதழ், மின்கலம் போன்றவற்றை முதலில் சரிபார்க்க வேண்டும். ஓட்டுநர் நடத்துனர் இருவரும் கட்டாயம் சீருடையில் இருக்க வேண்டும். மினி பேருந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.அதிவேகமாக வாகனத்தை ஒருபோதும் இயக்கக்கூடாது.அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வாகனத்தில் பொருத்துவதால் அதிக வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது. முதலுதவி பெட்டியில் மருத்துவ உபகரணங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி எழுப்பக்கூடாது.போக்குவரத்து சமிக்ஞையை (SIGNAL) மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும்.சாலை பாதுகாப்பு விதிகளை மீறும் மினி பஸ் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!