மு.க.அழகரி&மு.க.ஸ்டாலின் அண்ணன் தம்பி சகோதரத்துவத்துக்கு திருப்புமுனையாக அமைந்த தமிழக சட்டசபை தேர்தல்.

திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து முக அழகிரி விடுவிக்கப்பட்டதிலிருந்து எந்த ஒரு கட்சியிலும் இணையாமல் தனித்துவமாக அமைதியாக இருந்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு முக அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு க ஸ்டாலின் நிச்சயம் ஒரு காலத்திலும் தமிழக முதல்வராக முடியாது என்று கூறியிருந்தார்.தற்போது தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமைந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று சொன்ன அண்ணன் முக அழகிரி தம்பி மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு பல்வேறு கட்சிகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.அந்த வகையில் மதுரை மாநகர் முழுவதும் அழகிரி ஆதரவாளர்கள் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் இணைந்த இதயங்கள் தம்பி தலைமை ஏற்க வா என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!