மனநலம் குன்றியவர்கள் & ரோட்டரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் திட்டம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் மதுரையின் அட்சய பாத்திரம் என்ற அமைப்பு சார்பாகமனநலம் குன்றியவர்கள் மற்றும் ரோட்டோரத்தில் பசியால் வாடுபவர்களுக்கு தினசரிஉணவு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா சமூக ஆர்வலரும் மங்கையர்க்கரசி மில்ஸ் சேர்மன் கண்ணப்ப செட்டியார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கலந்துகொண்டு தினசரி உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.தொடர்ந்து ரோட்டோரத்தில் ஆதரவற்று இருக்கும் பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் காவல் துறை உதவி ஆணையாளர் கிரேஸ் ஆடிட்டர் சேது மாதவா விக்டோரியா எட்வர்டு மன்ற செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாலு சிறப்பாக செய்திருந்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!