கொரோனா 2ம் அலை; டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட கோரிய வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட கோரிய வழககில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுபானங்கள் விற்பனை இன்னும் அனுமதிப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விபரம்: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் நிலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், வழிபாட்டு கூட்டங்கள் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்துமதுக்கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். மேலும் கொரோணா தொற்று பரவல் சரி ஆகும் வரை அனைத்து மது கடைகளையும் மூட மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என மனு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு , மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!