மதுரை மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினார்.செயலாளர் மாயாஅழகன்,பொருளாளர் ராமதாஸ்,ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகி பால்பாண்டி வரவேற்றார்.இதில் நிர்வாகிகள் ஹிட்லர்,முத்தையா உட்பட பலர் பேசினார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் மற்ற தொழில்கள் நலிவடைந்து வருவது போல் கறிக்கோழி வளர்ப்பு அதிக இடையூறுகளை சந்தித்து வருகின்றது. கோழிகளுக்கு தேவையான மாட்டுத்தீவன வாகனம் அடிக்கடி தடை செய்யப்படுவதால் மிகுந்த சிரமம் உள்ளது. கறிக்கோழி வளர்ப்பு அடையாள அட்டையை காண்பித்தாள் போலீசார் அனுமதி வழங்க முன்னுரிமை தரவேண்டும். தொடர்ந்து கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வருடமொன்றுக்கு 1. 50 பைசா ஏற்றி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.திருப்பரங்குன்றம்,மேலூர்,வாடிப்பட்டி,உசிலம்பட்டி,திருமங்கலம் ஆகிய தாலுகாக்களில் இருந்து கோழி வளர்ப்போர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அரசின் உத்தரவுப்படி கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!