மதுரையில் கொரோனா பரவலை ஒழிக்க 508 தேங்காய் வைத்து சிறப்பு வழிபாடு – இதில் கபசூர குடிநீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது .

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 16,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில், நாள் ஒன்றிற்கு சராசரியாக 500 க்கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.தொடர்ந்து கருணா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்தநிலையில் மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் கொரோனா பரவலை ஒழிப்பதற்காக 508 தேங்காய்களை வைத்து சிறப்பு பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கபசுரக் குடிநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!