கொரானா 2வது அலை காரணமாகபாதிக்கப்பட்டுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறி மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய மதுரை மேலமடையை சேர்ந்த மோகன்.

நாடு முழுவதும் கொரானா இரண்டாவது அலை மிகத் தீவிரம் அடைந்துள்ளது.கொரானா நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதனால் பலதரப்பட்ட மக்கள் மிகவும் வாழ்வாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு கொரானா ஊரடங்கால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது மகளின் விருப்பத்திற்கு ஏற்ப படிப்புச் செலவுக்கு வைத்திருந்த ரூபாயை மதுரை மேலமடையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நிவாரண நிதிக்கு செலவிட்டார்.இவருடைய இச்செயலுக்கு பிரதமர் உட்பட உலகமே பாராட்டியது.மீண்டும் இதேபோல் கொரானா 2வது அலை காரணமாக முடிதிருத்தும் நிலையங்கள் அடைக்கப்பட்டிருப்பதால் இன்று மதுரை மேலமடையில் மோகன் 100க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் மளிகை சாமான்கள் வழங்கினார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!