ஒரே நாளில் 73 தடவைக்கு மேல் 40284 ரூபாயை அபராத தொகையாக பிடித்தம் செய்த HDB தனியார் நிதிநிறுவனம் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்.இவர் கிராமத்தில் விவசாய வேலை செய்து வருகிறார்.இவர் தனது சொந்த தேவைக்காக மதுரை செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் HDB தனியார் நிதி நிறுவனத்தில் 25 ஆயிரம் ரூபாயை கடந்த 02.07.2019 அன்று கடனாகப் பெற்று ஆறு மாத தவணையை சரியாக செலுத்தி வந்துள்ளார்.அதன் பின்பு கொரோனா காலத்தில் தவணையை சரிவர செலுத்த இயலவில்லை.சில மாதங்கள் கழித்து மகன் மருத்துவ செலவுக்காக நகையை அடமானம் வைத்த தொகை 45 ஆயிரம் ரூபாய் முழுவதையும் ஒரே தவணையாக 17.2.2021 ஒரே நாளில் 73 முறை பிடித்தம் செய்து உள்ளனர்.இதனை கண்டதும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது.உடனடியாக மதுரை செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நிதி நிறுவன கிளையில் சென்று தொடர்பு கொண்டாள் அங்குள்ள அலுவலர்கள் ஒருமையாகவும் தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.இதனால் நான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.மேலும் இருபத்தைந்தாயிரம் ரூபாயை முழுவதுமாக திருப்பிச் செலுத்தவேண்டி இன்றுவரை குறுஞ்செய்தியும் அனுப்பி வருகின்றது இந்த தனியார் நிதி நிறுவனம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!