சோழவந்தான் சித்திரை திருவிழா வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறாததால் பக்தர்கள் விரக்தி.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனக நாராயணப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வைகையாற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று அதி விமரிசையாக நடைபெறும். இதனால் நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா பாதிப்பின் காரணமாக சித்திரை திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது .இதனால் பக்தர்கள் விரக்தியில் மிகுந்த கவலையுடன் காணப்பட்டனர். இருந்தும் தங்களின் குழந்தைகளுக்கு ஆற்றின் கரையோரமாக மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொரணா பாதிப்பு நீங்கி அடுத்த ஆண்டாவது கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்று நாட்டில் நன்மைகள் நடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாக கூறுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!