விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரம் கிராமத்தில் வைப்பாறு படுகைகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உள்ளதால் அரசின் பெருமளவு சுரண்டப்படுகிறது. இரவு நேரங்களில் லாரிகளில் ஜேசிபி மூலம் மணல் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கிராம மக்கள் புகார் அளித்தாலும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தெரிந்தே மணல் கொள்ளை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக் படாத நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளிலிருந்து நாள் கொள்ளை நடைபெற்று வருவதால் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் ஆளுங்கட்சியினரா அல்லது எதிர்க்கட்சியினரா அல்லது இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்து மணல் கொள்ளை பில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.மணல் கொள்ளையை ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தல் இந்த நிலையில் இது நடைபெறும் மணல் கொள்ளையை கண்டுகொள்ளாமல் உள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.