கொரானா 2வது அலையால் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வைகை ஆற்றில் வெண்பட்டு உடுத்தி எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்

திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை சித்திரை திருவிழா.அதில் மீனாட்சி திருக்கல்யாணம் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் எழுந்தருள்வார்.கடந்த ஆண்டு கொரொண நோய் தொற்று காரணமாக சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடைபெற்றது.இந்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குரானா 2வது அலை தீவிரமடைந்து வருவதால்இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் மாதிரி வைகையாறு வடிவமைக்கப்பட்டு அதில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக இன்று காலை ஸ்ரீ கள்ளழகர் வெண்பட்டு உடுத்தி மாதிரியாக வடிவமைக்கப்பட்ட வைகை ஆற்றில் எழுந்தருளினார்.இதில்கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் ஊழியர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் யூடியூப் இணையத்தில் வாயிலாக வீட்டிலிருந்தே கண்டுகளிக்க நேரலை செய்யப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!