சலூன் கடைகளை தளர்வுகளோடு திறக்க அனுமதிக்க கோரி புதூர் முடிதிருத்தும் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு .

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் திரையரங்குகள் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து மதுரை புதூர் மருத்துவர் நல சங்கத்தின் சார்பாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் குறிப்பாக ஊரடங்கு கால கட்டத்தின் போது சலூன் கடைகள் அடைப்பின் காரணமாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் வாழ்வாதாரத்தை இழந்து பசி மற்றும் கடன் தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நிலைமை உருவாகியது. இந்த வருடமும் அதே போல் சலூன் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணி செய்வோம் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம் நிவாரண உதவிகள் கூட தேவையில்லை நேரக் கட்டுப்பாடுகள் விதித்து சலூன் கடைகள் அழகு நிலையங்களைத் திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!