நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிகளவு பரவி வரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறதுஇதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வந்துள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் மதுரை விமான நிலையத்திற்கு லாரி மூலம் வர வரவழைக்கப்பட்டுமதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ற இன்டிகோ விமானத்தில் இந்த ஆக்சிஜன் இயந்திரமானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரம் ஆனது மதுரையிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து லக்னோ செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.டெல்லி, குஜராத், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேஷ். உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவு உள்ள நிலையில் தொடர்ந்து இந்த இயந்திரமானது அடுத்தடுத்து சென்னை செல்லும் விமானங்கள் மூலமாக செல்ல இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20 கிலோ எடை கொண்ட இந்த ஆக்ஸிஜன் மிஷன் 90 லட்ச ரூபாய் மதிப்புள்ளது என்றும் நாள் ஒன்றுக்கு 500 முதல் 700 கிலோ அளவில் திவ ஆக்ஸிஜன் ஹ்பத்தி செய்ய முடியும் என தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.