நாடு முழுவதும் தொழிலாளர் காப்பீட்டுக் மருத்துவமனை (ESI) செயல்பட்டு வருகிறது. கொரோண தடுப்பு ஊசி அரசு மருத்துவமனையில் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு போடப்படுகிறது.இதில் பல பகுதிகளில் தடுப்பு ஊசி தட்டுப்பாட்டில் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பல லட்சம் பேர் பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஏன் இதுவரை தடுப்பு ஊசி போடுவதற்கு உத்தரவு வழங்கவில்லை என மத்திய மாநில அரசுக்கு தொழிலாளர்கள் மற்றும் அவர் குடும்பத்தினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தனியாருக்கு மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்படுகிறதா??? தொழிலாளர்களும் தொழிலாளர் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்புகின்றனர். தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள் என அரசு விளம்பரம் செய்கிற தவிர இதுபோன்ற அரசு மருத்துவமனைகளில் தடுப்பு ஊசி செலுத்தினால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் குடும்பத்தினரும் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எளிதாக இருக்கும் ஏன் இதுவரை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பு ஊசி வழங்கவில்லை என விளக்கம் அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வருகின்ற ஒன்றாம் தேதி முதல் 18 வயது தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு லாபம் வைத்து மருந்துகளை விற்பனை செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்களா .மத்திய மாநில அரசுகள் எதிர்பார்ப்புடன் பணம் செலுத்தியும் ஏமாந்து காத்துக்கிடக்கும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினரும்…..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.